ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 43 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை ஆயுட்காலம் அடுத்தாண்டு ஜனவரி 5ம் தேதி முடிகிறது. இந்த நிலையில், 81 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு வரும் நவம்பர் 30ம் நாள் துவங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைப்பெற்று. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

இதையடுத்து, தேர்தல் களத்தில் பாஜகவும், காங்கிரசும் தீவிரமாக இறங்கி உள்ளன. காங்கிரசானது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்திக்கிறது. அந்த கூட்டணியுடன் ராஷ்டிர ஜனதா தளம் கட்சியும் கை கோர்த்துள்ளது.

கூட்டணிக்கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்பிஎன் சிங் கூறியதாவது:

JAR

சட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியானது 31 இடங்களில் களம் காண்கிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. எங்கள் கூட்டணியின் முதலமைச்சராக வேட்பாளராக ஹேமந்த் சோரன் நிறுத்தப்படுகிறார் என்றார்.