மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், இன்று இரவுக்குள் ஆட்சி அமைக்கப்பட வேண்டிய நிலையில், சிவசேனாவின் முதல்வர் பதவி பிடிவாதம் காரணமாக, அங்கு பாஜக உள்பட எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் சட்டமன்றம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார்,  மகாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா ஆட்சி அமைக்கத்தான் மக்கள் வாக்கு  அளித்துள்ளனர். அவர்கள் தாமதம் இல்லாமல் உடனே  ஆட்சி அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளர்.

மகாராஷ்டிராவில்  ஆட்சி அமைக்க கால அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், இதுவரை  ஆட்சி அமைப்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இதற்கிடையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து பேசியதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சரத்பவார் கூறும்போது,  மகாராஷ்டிராவில் பா.ஜ.,வும் சிவசேனாவும் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். அவர்கள் ஆட்சி அமைக்க வேண்டும். இதனை தான் நானும், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வேலேயும் ஆலோசனை நடத்தி ஏற்று கொண்டோம்.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தின் பொருளாதார நிலையை பாதித்து உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

காங்., மூத்த தலைவர் ஹூசைன் தல்வாய் கூறும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். கட்சி மேலிடத்தின் கட்டளையை பின்பற்றுவதால் எங்கள் கட்சியினர் விலகி செல்லமாட்டார்கள். மகாராஷ்டிராவில் பாஜ., ஆட்சி அமைக்க விடமாட்டோம். மாநிலத்தை காப்பாற்றவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என்றார்.