சென்னை:

மிழகத்தில் பிளாஸ்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா குடிநீர் பாட்டில்களும் விரைவில் கண்ணாடி பாட்டில்களுக்கு மாற உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, கடந்த 2013ம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி,  அனைத்து பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் ரூ.10க்கு ஒரு லிட்டர் அளவிலான  அம்மா குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த அம்மா குடிநீர் பாட்டில்கள் ஒரு நாளுக்கு சுமார் 80 ஆயிரம் லிட்டர்  தமிழ்நாடு முழுவதும் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல்  பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அம்மா குடிநீர் வழங்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களையும்  மாற்ற தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கண்ணாடி பாட்டில்களில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான அதாவது சுமார் 750 மிலி அளவு கொள்ளவு கொண்ட கண்ணாடி பாட்டிலில் அம்மா குடிநீர் விற்பனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக  புதிய டெண்டர் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.