திருப்பதி

ட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட 4 திருப்பதி கோவில் அர்ச்சகர்களுக்கு மீண்டும் பணி புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் திருமலை ஏழுமலையான் கோவில் வைகாசன ஆகம பரம்பரையைச் சேர்ந்த 4 பேர் பரம்பரை முறையில் அர்ச்சகர்களாக இருந்து வந்தனர்.   இவர்கள் ரமண தீட்சதலு, சீனிவாச தீடதலு, நாராயண தீட்சதலு மற்றும் நரசிம்ம தீட்சதலு ஆவார்கள்.

இவர்கள் நால்வருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வயதைக் காரணம் காட்டி கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இவர்கள் அனைவரும் இங்கு ஊதியத்துக்காக மட்டும் பணி புரிவதில்லை என அர்ச்சகர்கள் சார்பில்தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில்,”ஓய்வு அளிக்கப்பட்ட 4 அர்ச்சகர்களும் மீண்டும் பணி புரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் மற்ற அர்ச்சகர்களுடன் இணைந்து மீண்டும் பணியைத் தொடங்கலாம்.

ஓய்வு பெற்ற  தலைமை அர்ச்சகரான  ரமண தீட்சதலு ஆகம ஆலோசகராகப் பொறுப்பேற்க உள்ளார்.   அவர் கூடுதலாக இளம் அர்ச்சகர்ளுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பையும் ஏற்பார்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.