டில்லி:

டில்லியில் வரலாறு காணாத அளவுக்கு மாசு பிரச்சினை ஏற்பட்டு மக்கள் சுவாசிக்க சிரமப்படும் நிலையில், மாசு பிரச்சினையில் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

1952 ஆம் ஆண்டில் லண்டனில் ஏற்பட்ட கடுமையான  புகைமூட்டம் 12000 பேரின் உயிரைப் பறித்தது  அந்த சோகமான நிகழ்வையும், லட்சக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டியவர்,  இவ்வளவு பெரிய பேரழிவுக்குப் பிறகு, வீதிகளில் இறங்கி போராடியதைத் தொடர்ந்து அங்கு சுத்தமான காற்றுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது,

அதுபோல, மாசு பிரச்சினையில்,  என்.சி.ஆர் பிராந்தியத்திலும், உ.பி.யிலும் மாசுபடுதலுக்கு எதிராக ஒன்றுபடு மாறு பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தியுள்ளார்.  இந்த பிரச்சினையில் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும், “தூய்மையான காற்று எங்கள் உரிமை மற்றும் பொறுப்பு” என்று போராட வேண்டும்  கூறினார்.

மேலும்,  “மாசுபாடு குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது என்று தெரிவித்து உள்ளவர், டெல்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ மற்றும் பல நகரங்களில் காற்று நச்சுத்தன்மை வாய்ந்து உள்ளது. இந்த காற்றில், எங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள், எங்கள் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வேலைக்குச் செல்கிறார்கள், என்றும் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

மேலும்,  #LetsUniteAgainstPollution என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, மாசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். கூறினார்.