
ஒவ்வொரு பொங்கலும் தீபாவளியும் தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் .அதே போல் ரசிகர்கள் மோதல்களும் வாடிக்கை தான் .
கடந்த பொங்கல் அன்று ரஜினியின் ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்து ஒன்றோடு ஒன்று போட்டி போட்டது .
கடந்த தீபாவளி அன்று விஜய்யின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கைதி’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகி வெற்றி பெற்றன.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பட்டாஸ்’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel