பெங்களூரு:

ர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்பட்ட திட்டமிட்ட பாரதியஜனதா, ஆபரேசன் கமலா என்ற திட்டத்தை செயல்படுத்தி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு பண ஆசைக்காட்டி , காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசை கவிழ்த்து ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 4ந்தேதி எடியூரப்பா பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை உச்சநீதி மன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கின் விசாரணை யின்போது ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எடியூரப்பாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ம.ஜ.த மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சியைக் கவிழ்க அம்மாநில பா.ஜ.க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. லோக்சபா  தேர்தலுக்கு முன்னதாக `ஆபரேஷன் கமலா’ என்பதன் மூலம் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை தங்கள் வசம் இழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.  அதையடூத்து,  காங்கிரஸ் மற்றும் ம.ஜ.தவைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ-க்கள்  சட்டமன்றச் செயலரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்து ஆட்சியை கவிழ்த்தனர்.

அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும், தனி விமானம் மூலம், பாஜக நிர்வாகிகள்  மும்பைக்கு அழைத்துச் சென்று  அங்குள்ள சோஃபிடெல் ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக எழுந்த நிலையில், அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில்,  தற்போது, எடியூரப்பா அதிருப்தி எம்எல்ஏக்களிடம்  பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. ஹுப்ளியில் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் எடியூரப்பா  ஆபரேஷன் கமலா குறித்து பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஷா (அமித்ஷா)  இந்த திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டதாகவும், எம்.எல்.ஏக்கள் மும்பையில் தங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறுவதாக உள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஆதரவாக வரும் என்றும் கூறுகிறார்.

இந்த வீடியோ கர்நாடக அரசியலில் மீண்டும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகுதி நீக்கம்  எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் இந்தவீடியோவை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இந்த வீடியோ வெளியானதன் மூலம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.