டில்லி:

மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது அதன்படி,  5 முதல் 15 வரை நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமை காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் உருவாகி உள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, உத்தேச RCEP ஒப்பந்தத்தின் “பாதகமான” தாக்கம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நவம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைமை பகுதிகளில் இந்த போராட்டங்கள் நடைபெறும். இந்த போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என தெரிவித்தார்.

மேலும், நவம்பர் இறுதி வாரத்தில் நாடு தழுவிய பெரிய அளவிலான போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.