நியூடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், நாட்டில் காங்கிரஸின் சரிவு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதற்கான அறிகுறிகளாகும். இப்போது நிலைமை தலைகீழாவதை எதிர்பார்க்கலாம் என்று கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் திங்களன்று தெரிவித்தார்.
கட்சி ஹரியானாவில் 2014ஆம் ஆண்டின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது மற்றும் காங்கிரஸ்-என்சிபி கூட்டணி மகாராஷ்டிராவில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அதன் எண்ணிக்கையை மேம்படுத்தியது.
தேர்தல் முடிவுகளை ” ஊக்கமூட்டும் ஒன்று“ எனக் குறிப்பிட்ட குர்ஷித் செய்தி நிறுவனத்திடம், ” இது அவர்களுக்கு (காங்கிரஸ் தொண்டர்களுக்கு) இரண்டாவது வாய்ப்பைத் தருகிறது, இது காங்கிரசில் நம் அனைவருக்கும் ஒரு நினைவூட்டல் என்று நினைக்கிறேன். எங்களுக்கு நிறைய துடிப்பு இருக்கிறது. இப்போது நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் மீண்டெழுந்து, நம்பிக்கையுடனும் உறுதியுடனும் போராடுவதுதான்.’’
முன்னாள் மத்திய அமைச்சர், மிகப் பழமையான கட்சி மோசமான குழப்பம் மற்றும் சுய சந்தேகத்திலிருந்து வெளியே வந்துள்ளது என்று கூறினார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் செயல்திறன் மற்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததைக் குறிப்பிட்டார்.
“நாங்கள் மிகவும் மோசமான காலகட்டத்திலிருந்து வெளியே வருகிறோம், எங்களுக்கு நிறைய குழப்பங்கள், சுய சந்தேகம் போன்றவை இருந்தன. அந்த மூடுபனி அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன், பாதையை மீண்டும் தெளிவாகக் காணலாம்“, என்று அவர் கூறினார்.
கட்சிக்கு ஒரு சிறந்த தேர்தல் அறிக்கை உள்ளது, இருப்பினும், பொது நிகழ்ச்சிகளில் நோக்கத்தின் தெளிவு இருக்க வேண்டும், என்று குர்ஷித் கூறினார். அறிக்கையில் இருந்து மாறுபடுவதும் முரண்பாடான நிலைப்பாடுகளை எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டிய சில விஷயங்கள் என்று அவர் மேலும் கூறினார்.
“எங்களுக்கு ஒற்றுமை மற்றும் நோக்கத்தின் தெளிவு தேவை, அதை நாங்கள் காட்ட முடியும் என்று நம்புகிறேன்,” என்று குர்ஷித் கூறினார்.