பாஜகவின் வாய்ப்புகளைப் பட்டியலிட்டால் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அது சட்டசபைத் தேர்தல்களில் எங்கேயோ சென்றிருக்க வேண்டிய அளவு அந்த பட்டியல் நீள்கிறது. இந்த தீபாவளிக்கு அது ஜாக்பாட் பரிசினைப் பெறுவதற்கு அத்தனைத் துருப்புச் சீட்டுகளும் அதனிடமிருந்தன. ஆனால், அது எப்படி கிட்டாமல் போனது? என்று அலசுகிறார் கட்டுரையாளர் ஷிவம் விஜ்.
அவரின் கூற்றிலிருந்து; பாரதீய ஜனதா தேசியவாதத்தையும் ஹிந்துத்வாவையும் கொண்டிருந்தது. நரேந்திர மோடி அரசு காஷ்மீரில் 370 சட்டவிதியை பயன்படுத்தி காஷ்மீரிகளைக் கட்டுக்குள் வைத்தது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் வாக்குறுதியை அமித்ஷா அளித்திருந்தார். அவ்வாறே அயோத்தியில் ராமர் கோயிலென்று அத்தனையும் சரியாகவே சென்று கொண்டிருந்தது.
பிரதமர் மோடி ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் மஹாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் துடைத்தெடுத்தது உட்பட 303 பாராளுமன்றத் தொகுதிகளை வென்றெடுத்து வாகை சூடியிருக்கிறார்.
அதனிடம் ஜாதி அடிப்படையிலான வியூகம் இருக்கிறது.
அரியானாவில் போராட்டக்காரர்களாக இருந்த ஜாத் சமூகத்தையும் கூட சமரசம் செய்தாகி விட்டது. அவ்வாறே அங்கிருந்த தலித் சமூகத்தையும் சமாதானம் செய்திருந்தது.
காங்கிரசால் கூட இது செய்ய இயலாத ஒன்றாக இருந்தது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபத்நாவிஸ் மராத்தா கோட்டா என்ற அஸ்திரத்தை வைத்திருந்தார்.
இந்த தேர்தலில் அது காங்கிரஸை வெல்வது அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கட்சியை வெல்வதற்கு ஒப்பாக இருந்தது. அரியானாவிலும் மஹாராஷ்டிராவிலும் சில வேட்பாளர்களை கடைசி நேரத்தில் தான் இறக்கியது. அதுவும் பழைய நபர்களையே. காங்கிரஸ் பக்கத்தில் அவர்களுக்குள் நடந்த பழையவர்களுக்கும் புதியவர்களுக்குமான சண்டையில் நிறைய பேர் சென்று விட்டிருநதனர்.
அவர்கள் எதிர்த்து களம் காணுவதான பாவனை கூட செய்ய இயலாத அளவிற்கு உட்கட்சிப் பூசலில் மூழ்கியிருந்தனர். தலைமைப் பொறுப்புகளுக்கான போராட்டத்தில் புதியவர்கள் பலர் வெளியேறிய வண்ணமிருந்தனர்.
அதேவேளையில், பாஜக எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தக்க வாய்ப்புகளாக பண பலம், ஊடக பலம், இயக்க சக்தி, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவைகளையும் கொண்டிருந்தது.
அப்புறம் பிரபலமான முகமாக நரேந்திரமோடி, டொனால்ட் ட்ரம்ப் கூறியது போல் தேசத்தின் தந்தையாக இருந்தார். உள்ளூரில் பிரபலமான முகங்களாக தேவேந்திர ஃபத்நாவிஸ், லால் கட்டார் ஆகியோர் தனிக்கவர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களும் குறைகூற இயலாத அளவிற்கு தேர்தல் பணிகளில் தங்கள் sசெயல்திறனை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆகவே, இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதி தோற்பதற்கும் கூறுவதற்கு காரணமேயில்லையெனும் சூழலே நிலவியது. ஒருவேளை எதிர்தரப்பு தலைவர்களின் கோட்டையென்று பார்த்தாலும் அதுவும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் குறைந்தது இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணி 2/3 வெற்றியை ஈட்டியிருக்க வேண்டும்.
என்றாலும், இப்போது நாம் எங்கு வந்திருக்கிறோமென்றால் இந்தக் கட்டுரை எழுதப்படும்போது முழுமையான தேர்தல் முடிவுகள் வந்திருக்காவிட்டாலும் ஒன்று தெளிவாகிறது. அது பாஜக எதிர்பார்த்த அளவு எதுவும் இங்கு நடக்கவில்லையென்பதே.
அரியானாவில் ஆட்சியமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மையில் ஒரு சிறிய பற்றாக்குறை ஏற்படலாம். ஆட்சி அமைக்கவும் அமைக்க இயலாது போவதற்கும் அங்கு வாய்ப்பிருக்கிறது.
மஹாராஷ்டிராவில் 2014ஐ விட தற்போது பாஜக சீட்டுகளை இழந்துள்ளது. ஆனால், அதன் கூட்டணிக்கட்சியான சிவசேனா எப்போதையும் விட சிறப்பாக சுவீகரித்துள்ளது.
ஆக, துருப்புச் சீட்டுகளையெல்லாம் கைவசம் கொண்டிருந்த பாஜகவிற்கு கொடுத்த அதிர்ச்சி, வாக்காளர்கள் அதன் இறுமாப்பை ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதாகவே உள்ளது. இறுமாப்பு தலைமையில் மட்டுமில்லை அதன் பல்வேறு படிநிலைகளிலும் வெளிப்படுகிறது. உதாரணத்திற்கு அரியானாவில் உள்ள ஒரு தலைவர் கூறுகிறார் வாக்குப்பதிவு இயந்திரம் தங்களுக்கு சாதகமாகவே இருக்குமென்று.
மே 23 லிருந்து ஜனநாயகத்தைக் கிடப்பில் போடு என்ற மனப்போக்கில் தேசியவாதத்தை மட்டும் உயர்த்திப் பிடித்த நரேந்திர மோடி அமித்ஷாவிற்கு மக்கள் வெறும் தேசியவாதம் வயிற்றை நிரப்பாது என்று சொல்லியிருக்கின்றனர்.
மஹராஷ்டிரா அரியானாவில் மக்கள் வாக்களித்த விதமானது நரேந்திர மோடி அரசின் மந்தமான பொருளாதாரத்தின் மீதுள்ள அதிருப்தியின் அடையாளமாகவும் கொள்ளலாம். மக்கள் இந்துத்துவா போதையில் திளைக்கவில்லை என்பதற்கும் ஒரு சான்றாகக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பின்மை அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவாகவும் இருக்கலாம்.
எதுவாயினும், இது பாஜகவிற்கான மக்களின் ஒரு எச்சரிக்கையாகக் கொள்ளலாம். எதிர்கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு போதும் அவர்கள் மீண்டெழுந்து வந்து தங்கள் பணிகளைத் தொடர.
எதிர்தரப்பில் உள்ள கட்சிகளுக்கு கிடைத்த எண்ணிக்கைக் குறைவாகத் தெரியலாம். ஆனால், இது அவர்களது தோள்களுக்கு வலு சேர்க்கும் ஒரு பெரிய சக்தியூட்டலாக இருக்கிறது. அத்துடன் வாக்காளர்களது இத்தகைய போக்கும் வரும் காலங்களில் பெரும் அரசியல் மாற்றங்களுக்கு வழிகோலும் என்பது தெளிவாகத் தெரிகிறது.