சண்டிகர்:
டிக்டாக் பிரபலம் சோனாலி போகத் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஆதம்பூர் தொகுதியில் களமிறக்கப்பட்டு நிலையில், படுதோல்வி அடைந்தார்.
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஆட்சியை கைப்பற்ற பாஜக காங்கிரஸ் கட்சிக்கு இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட சோனாலி தோல்வியை தழுவி உள்ளார்.
அரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் வசித்து வருகிறார் போகத், கடந்த 20ஆண்டுகளுக்கு மேல் நடிகையாக பல்வேறு திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சமீப காலமாக டிக்டாக் செயலி மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்து உள்ளார். இவரை 6.5 லட்சம் பேர் சமுக வலைதளங்களில் ரசிகர்களாக உள்ளனர். இவர் கடந்த மாதம் பாஜகவில் இணைந்த நிலையில், அவருக்கு பாஜக வாய்ப்பு வழங்கியது.
அரியானா முன்னாள் முதல்வரான பஜன்லால் தொகுதியான ஆதம்பூர் தொகுதியை கைப்பற்றும் நோக்கில் டிக்டாக் புகழ் டிவி நடிகை சோனாலி பொகத்தை (Sonali Phogat) களத்தில் இறக்கியது..
ஆதம்பூர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னாய் போட்டியிட்டார். 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர் அவர். அவரை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தும் சோனாலியாவால் வெல்ல முடியாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட 30, 000 வாக்குகள் வித்தியாசத்தில்சோனாலி தோற்றுப் போய்விட்டார். இது பாஜகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.