நியூயார்க்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன மருந்தினால் ஒரு ஆணுக்கு மார்பகம் பெரியதாக வளர்ந்த வழக்கில் ஜூரி ஒருவர் ரூ.800 கோடி டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட பரிந்துரை செய்துள்ளார்..

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ரிஸ்பெர்டால் என்னும் மருந்து மனச்சிதைவு, ஆட்டிசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கலாம் என அமெரிக்க மருந்து நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த மருந்தினால் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என நிறுவனம் தெரிவிக்காமல் இருந்துள்ளது. அத்துடன் இந்த மருந்துகளைக் குழந்தைப் பருவத்தினர் பயன்படுத்துவது குறித்தும் எவ்வித எச்சரிகையும் அளிக்கப்படவில்லை.
பிலடெல்பியா நீதிமன்றத்தில் நிக்கோலஸ் முரே என்னும் 26 வயது இளைஞர் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த இளைஞருக்கு ஆட்டிசம் காரணமாக மருத்துவர்கள் ரிஸ்பெர்டால் மருந்தைப் பரிந்துரை செய்துள்ளனர். இந்த மருந்தை அவர் 2003 முதல் உட்கொண்டு வருகிறார். அவருக்கு இந்த மருந்தின் பக்க விளைவால் மார்பகம் பெரியதாக வளர்ந்துள்ளது.
இதற்குப் பொறுப்பேற்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என முரே சார்பில் வாதிடப்பட்டது. கடந்த 2015 ஆம் வருடம் இந்த வழக்கில் ஜான்சன் நிறுவனம் முரேக்கு 17.5 லட்சம் டாலர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜான்சன் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. கடந்த 2018 ஆம் வருடம் இந்த இழப்பீடு 6.8 லட்சமாகக் குறைக்கப்பட்டது.
இதையொட்டி பென்சில்வேனியா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு உதவ ஜூரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஜூரிகள் குழுவில் உள்ள ஜூரி ஒருவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் முன்னெச்சரிக்கை எதுவும் அளிக்கவில்லை எனவும் இதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கு இழப்பீடாக 800 கோடி டாலர் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்க நீதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
ஜூரியின் இந்த பரிந்துரையால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]