மதுரை:

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில், இன்று மதுரை கலெக்டர் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் பாசன வசதி பெறும்.

பெரியார் பாசன பகுதி ஒரு போக பாசனத்திற்கு 85,563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் 19,005 ஏக்கர் பகுதிகளும் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணியில் இருந்து, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்து வைத்தார்.

இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர் 3 மாதங்கள் நீடிக்கும் என்றும், மொத்தம் 1130 கனஅடி தண்ணீர் அணையில் திறந்துவிடப்பட தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும்,. நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கும் அளவு கூடக்குறைய வாய்ப்பு உள்ளதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 98,764 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர் நிலமும், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும்,  ஏற்கனவே வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு 860 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டதாக கூறியவர்,  இன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீரோடு சேர்த்து ஆற்றில் 2090 கனஅடி தண்ணீர் வருகிறது.