சென்னை:

டுத்த 24 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி,  நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 10 செண்டி மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, கிருஷ்ணகிரி நகர் பகுதிகளில் 8 செண்டி மீட்டரும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் 6 செண்டி மீட்டர் மழை பதிவாகி  உள்ளது.

சேலம் சங்கரி துர்க்கம், தேனி பெரியகுளம், நீலகிரி நடுவட்டம், கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ஆகிய இடங்களில் 5 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ள வானிலை மையம்,

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையால், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும்,   நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.