சென்னை:

மிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று அதிகாலை பூம்பூம் மாட்டிடம் ஆசி பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வீடு பட்டினப்பாக்கத்தில் உள்ளது. இவர் அதிகாலை யில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது, அந்த வழியாக பூம் பூம் மாட்டுக்காரர் சென்று கொண்டிருந்தார்.

இதைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார் பூம் பூம் மாட்டுக்காரைரை அழைத்து அந்த மாட்டிடம் ஆசி பெற்றார். இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி” என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன் என்று நினைவுபடுத்தியவர்,  பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

ஆனால், இன்றைய தலைமுறையினர்,  நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் அதிகரித்து உள்ளதாக வருத்தப்பட்டவர்,  பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை மறந்து விடக்கூடாது என்றும் கூறினார்.