காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார். இவருக்கு வயது 55.
தமிழ்த் திரையுலகில் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு, தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருஷ்ணமூர்த்தி.
‘தவசி’ ‘நான் கடவுள்’ ‘மருதமலை’, ‘வேல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘கைதி’ படத்திலும் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.
புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக குமுளியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி. இன்று (அக்டோபர் 7) அதிகாலை 4.30 மணியில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார் .
இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், பிரசாந்த் மற்றும் கெளதம் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.