மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பாஜக சிவசேனை கூட்டணி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. தேர்தலில், பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், அதிருப்தி நிலவி வருகிறது.
மேலும் பாஜக தரப்பில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பாஜக சிவசேனா இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 21ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு மீண்டும் பாஜக சிவசேனை கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 124 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் பாஜகவும் கூட்டணிக் கட்சி களும் போட்டியிடுகின்றன , இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று செய்தியர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாபஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஆகியோர் அளித்த பேட்டியின்போது, மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் சிவசேனா கட்சி 126 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சி 14 தொகுதிகளிலும், மற்ற 148 இடங்களில் பாஜகவும் போட்டியிடுகிறது என்று தெரிவித்தனர்.
இருகட்சிகளுக்கும் இடைேய மிகப்பெரிய கூட்டணி அமைந்துள்ளது தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இந்த முறை பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பல புதிய முகங்களை பாஜக களத்தில் இறக்கி உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் வினோத் தவ்தே, பிரகாஷ் மேத்தா, ஏக்நாத் காட்ஸே, சந்திரசேகர் பவன்குலே, விஷ்ணு சவாரா மற்றும் திலீப் மற்றும் முன்னாள் தலைமை கொறடா ராஜ் புரோஹித் உள்பட 12 பேருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பதவிகளில் உள்ள வாரிசுகள் 18 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டுஉள்ளது.
பாஜக வெளியிட்ட நான்காவது மற்றும் இறுதி பட்டியல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் 150 ஆக உயர்த்தியது.
முன்னாள் அமைச்சர்கள் வினோத் தவ்தே, பிரகாஷ் மேத்தா, ஏக்நாத் காட்ஸே, சந்திரசேகர் பவன்குலே, விஷ்ணு சவாரா மற்றும் திலீப் காம்பிள். கட்சி தனது தலைமை கொறடா ராஜ் புரோஹித்தையும் கைவிட்டது.
இது பாஜக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாஜக சிவசேனை இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.