விசாகப்பட்டினம்

ந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் பந்தய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் நடைபெற உள்ள போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.   ஏற்கனவே  விளையாடிய டி 20 தொடர்களில் இரு அணிகளும் 1-1 என்னும் புள்ளிகளில் சமன் செய்துள்ளது.    அடுத்து 3 டெஸ்ட் தொடர்களில் இவ்விரு அணிகளும் மோத உள்ளன.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.   புதிய அறிவிப்பின்படி விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் காயம் காரணமாக விலகியுள்ள பும்ராவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய அணியில் விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், செத்தேஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.