
சூரத்: இந்தியா – தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி மழையால் ரத்தானது.
தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெல்ல, இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது.
மூன்றாவது போட்டி நடக்கவிருந்தது குஜராத்தின் சூரத் நகரில். அங்கும் மழை பெய்தததால் மூன்றாவது போட்டியும் ரத்தானது. இந்நிலையில் நான்காவது போட்டி நடக்கவிருப்பதும் அதே சூரத்தில்தான். நடக்கும் தேதி அக்டோபர் 1.
தற்போதைய நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நான்காவது போட்டியேனும் நடக்குமா? என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel