ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டுள்ள அசாதுதீன் ஓவைசி தலைமை யிலான  ஏஐஎம்எம்ஐஎம் கட்சி (AIMIM அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் கட்சி) இளைய தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பிரபல சமூக வலைதளமான  டிக்டாக்கில் அதிகாரப்பூர்வமாக கணக்கை தொடங்கி உள்ளது.

அசாதுதீன் ஓவைசி

வாக்காளர்களையும், இளைய தலைமுறையினரையும் கட்சி தொடர்பான அறிவிப்புகள், செயல்கள் விரைவில் சென்றடையும் நோக்கத்தில் இந்த கண்கை கட்சியின் பெயரில் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலேயே முதல்முறையாக டிக்டாக் சமூக வலைதளத்தில் பதிவு செய்த முதல் கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுவாக சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் தங்களது அதிகாரப்பூர்வ பயனர்  கணக்கை வைத்து, அதன்மூலம் கட்சித் தொண்டர்கள் அறிவிப்புகள், வீடியோக்கள், நிகழ்வுகள் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், சமீப காலமாக மக்களிடையே பிரபலமாகி வரும்  டிக்டாக் வலைதளத்தில் அசதுதீன் ஓவைசியின் கட்சி பயனர் அக்கவுண்டை தொடங்கி, நாட்டிலேயே டிக்டாக்கில் பயனர் அக்கவுண்ட் தொடங்கப்பட்ட முதல் அரசியல் கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது.

டிக்டாக் சமுக வலைதளத்துக்கு  இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இது ஃபேஸ்புக் பயனர்களைவிட அதிகம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து  AIMIM கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மொபைல் அடிப்படையிலான சமூக ஊடக பயன்பாட்டின் மூலம் ஒரு பயனருக்கு ஒரு செய்தியை சுருக்கமாக பகிர்ந்து கொள்ளவும் அதே நேரத்தில் அதை வேடிக்கையாகவும் செய்ய வாய்ப்பளிக்கிறது, கட்சி அதைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.  இளம் இணைய பயனர்கள் மற்றும் முதல் முறையாக வாக்காளர்களை அணுகவும். கட்சி ஏற்கனவே பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற பிற சமூக ஊடக தளங்களில் ஒரு பிரத்யேக பக்கத்தைக் கொண்டுள்ளது, கட்சித் தலைவர் இரு ஊடகங்களிலும் வழக்கமான அரசியல் புதுப்பிப்புகளை பதிவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் டிக்டாக்கில் கட்சி பதிவேற்றிய வீடியோக்களில் ஒன்றில், கட்சித் தலைவர்   அசாதுதீன் ஓவைசி  தனது கட்சி தலைமையகம் அமைந்துள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள தாருசாலத்திற்கு (Darulsalam) மக்களை அழைக்கிறார். ஒருவரின் மதம் மற்றும் சாதி ஆகியவற்றைப் பொருட் படுத்தாமல் எங்கள் கட்சியின் கதவுகள் அனைவருக்கும் எப்போதும் திறந்திருக்கும், என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.