சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி கட்சியியான பாஜகவின் தொல்லை காரணமாக வேட்பாளர் அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார். இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி உள்ளது. வரும் 30-ம் தேதி முடிவடைகிறது
நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று முதல் 90க்கும் மேற்பட்ட அதி.மு.க.வினர் விருப்ப மனு வாங்கி உள்ளனர். சினிமா டைரக்டர், மாவட்ட செயலாளர்கள் விருப்பமனு வாங்கி உள்ளனர்.
நாங்குனேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சினிமா டைரக்டரும், நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் இன்று 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு பெற்றார். அப்போது அண்ணா தி.மு.க. கலைப் பிரிவு செயலாளர் ஆர்.வி. உதயகுமார், கலைப்பிரிவு தலைவர் லியாகத் அலிகான், கவிஞர் முத்துராமலிங்கம், நடிகர் அருள்மணி உட்பட பலர் உடன் இருந்தனர்.
அண்ணா தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி.யும், திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளருமான கே.ஆர். பிரபாகரன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தஞ்சை கணேசராஜா உட்பட ஏராளமானபேர் விருப்ப மனு வாங்கினார்கள்.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.பி.யும், முன்னாள் மாவட்ட செயலாளருமான லட்சுமணன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேலு, எம்.ஆர். முத்தமிழ் செல்வன், வழக்கறிஞர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் பன்னீர் உட்பட ஏராளமானபேர் விருப்ப மனு வாங்கினார்கள்.
நேற்று அஷ்டமி என்பதால், நாளை இன்னும் ஏராளமானபேர் விருப்பமனு வாங்கி பூர்த்தி செய்ய இருக்கிறார்கள். அதுபோல புதுச்சேரி காமராஜர்நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவும் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால், இதில் வேட்பாளர் அறிவிப்பதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்று மாலை வேட்பாளர் நேர் காணல் நடைபெறும் என்று அதிமுக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை கேட்டு பாஜக தொல்லை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நேர்காணலில், விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.