வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த 40,000க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், வங்கிகள் இணைப்பை எதிர்த்து வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.