சென்னை:

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு புதைவட மின்கம்பி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இன்று காலை தனது தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச்  சென்று ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

அதையடுத்து, செம்பியம் அருகே  ஜவஹர் நகர் பகுதியில் உள்ள  பூங்காக்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  கொளத்தூர்  தொகுதியில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும், அதை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கையை தமிழகஅரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், கொளத்தூர் பகுதி முழுவதும், ஏற்கனவே தொடங்கப்பட்ட  புதைவட மின்கம்பி பதிப்பு பணிகளை  விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியவர், தற்போது நடைபெற்று வரும் பணிகளை பார்க்கும்போது, இந்த பணி முடிக்க 2022ம் ஆண்டு ஆகும் என்று கூறயவர், விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்த பேசியவர், சேலத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களின் வருகைக்காக காக்க வைக்கப்பட்ட முதியவர்  ஒருவர் உயிரிழந்துள்ள வேதனையான செயல் என்று கூறியவர்,  சுய விளம்பரம் செய்து கொள்வதை அ.தி.மு.க. அமைச்சர்கள் கைவிட வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.