டில்லி:
வெங்காயத்தின் விலை ஒரு கிலோ எழுபது ரூபாயை தாண்டி இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ள மத்தியஅரசு, தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டில் அதிக அளவில் வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் பகுதிகளில் விளைந்து வருகிறது. நடப்பு ஆண்டில் அங்கு கனத்த மழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்கனவே குடோன் களில் வைக்கப்பட்டிருந்த வெங்காயங்களும், மழை காரணமாக அழுகி வருகிறது. அதுபோல, வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காய பதுக்கலை தடுக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள லாசல்கான் சந்தைதான் நாட்டின் மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையாகும். இங்கு கடந்த வாரம் 33 ரூபாய் விலையில் விற்பனையாகி வந்த வெங்காய விலை, தற்போது 45ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. இந்த வெங்காயம் மாநிலங்களுக்கு சென்று, விற்பனையாகும்போது விலை இரட்டிப்பாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு இதுபோன்ற விலை உயர்வு ஏற்பட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யநிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெங்காய விலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இல்லதரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
சென்னைலையில் ஒரு கிலோ வெங்காயம் சில்லரை விலையில் ரூ.70 முதல் 85 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டில்லியில் ரூ.65 ஆகவும், மும்பையில் ரூ.55 ஆகவும் பெங்களூருரில் ரூ.50 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்துக்கு சென்று கொண்டிருப்பத பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அதன்படி, இருப்பில் உள்ள 56 ஆயிரம் டன் வெங்காயத்தை, தேவைப்படும் மாநிலங்களுக்கு பிரிந்துகொடுக்க முடிவு செய்துள்து. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு சில மாநிலங்கள் வரவேற்பு தெரிவித்து வெங்காயங்களை பெற்று வருகின்றனர்.
அதுபோல, வெங்காயத்துக்கான குறைந்த பட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலராக நிர்ணயித்த. அதோடு, 2 ஆயிரம் டன் வரை வெங்காயம் இறக்குமதிக்கு வரி ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
இதன் காரணமாக விரைவில் வெங்காயம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.