கோவை:

பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்பான முஜாஹுதீன் அமைப்பின் வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்த சேர்ந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முஜாஹுதீன்  பயங்கரவாதிகளிடம் தொடர்பில் உள்ள  வங்கதேசத்தைச் சேர்ந்த ஃபாரூக் கவுசீர் (Farooq Gauzir) என்ற இளைஞர் ஒருவர் கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் உள்ள நகைப்பட்டறையில் பணியாற்றி வந்தார்.  இவர் முஜாஹுதீன் பயங்கரவாத அமைப்பின் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இந்த விவரம், அவரது செல்போன் பழுது பார்க்க கொடுத்திருந்தபோது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது, அவர் முஜாஹுதீன் அமைப்பிடம் துப்பாக்கி தொடர்பான தகவல்களை பரிமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஃபாரூக் கவுசீர்  கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்துள்ள தும், அவரிடம் கோவையை அடிப்படையாகக் கொண்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.