சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரையின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
அண்ணாதுரையின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் அண்ணாதுரையின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.