சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை, தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது, விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், உதகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தொட்டபெட்டா சிகரத்தின் செப்பனிடப்பட்ட புதிய சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சுமார் ஒரு கோடியே 89 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கி இருக்கிறது. விரைவில் தேர்தல் நடைபெறும் என்று கூறினார்.