லண்டன்: ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 271 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச முடிவுசெய்தது. அந்த அணியின் முடிவு சரிதான் என்பதாகவே நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
துவக்க வீரர் ஜோசப் பர்ன்ஸ் 47 ரன்களை அடித்தார். ஜோ ரூட் 57 ரன்களும், ஜோஸ் பட்லர் 64 ரன்களும் எடுத்தனர். வேறுயாரும் அதிகபட்சமாக 30 ரன்களைக்கூட தொடவில்லை.
பென் ஸ்டோக்ஸ் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். முதல் நாளில் 82 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 271 ரன்கள் மட்டுமே எடுத்தது இங்கிலாந்து அணி.
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.