பெங்களூரு

ந்திய போர் விமானமான மிக் 21 இன் உலோகத்தை வைத்து பெங்களூரு வாட்ச் கம்பெனி கைக்கடிகாரம் தயார் செய்துள்ளது.

இந்திய விமானப்படையில் முதல் முதலில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் ரஷ்ய உரிமம் பெற்று தயாரித்த போர் விமானம் மிக் 21 பயன்படுத்தப்பட்டது.   இவ்வாறு முதன் முதலில் தயாரிக்கப்பட்ட விமானம் 1960 களில் இருந்து விமானப்படையில் உள்ளது.  இந்த விமானம் 1971 ஆம் வருடம் நடந்த வங்க தேச விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தது.  தற்போது அந்த விமானம் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு வாட்சி கம்பெனி என்னும் கைக்கடிகாரம் தயாரிக்கும் நிறுவனம் மாக் 1 என்னும் புதிய கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.   முதன் முதலில் தயாரிக்கப்பட்ட மிக் 21 விமானத்தின் உலோகத்தில் இருந்து இந்தக் கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.   இந்த முதல் மிக் 21 விமானத்தின் நினைவுக்காக இந்த கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கைக்கடிகாரங்கள் ரூ.48000 இருந்து ரூ.53000 வரை விலையில் விற்கப்பட உள்ளது.  இதன் சிறப்பு மாடலாக மாக் 9 என்னும் கைக்கடிகாரம் தேவைப்படுவோருக்கு ஆர்டரின் பேரில் தயாரித்து அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த  சிறப்பு கைக்கடிகாரத்தில் விமான ஓட்டிகள் அமர்ந்திருந்த காக்பிட் இல் இருந்த டயலகள் பயன்படுத்தப்பட உள்ளன.