#vijaytvsupersingerல் ஒருவரின் மூக்கை கேலி செய்வதும், எடையை கேலி செய்வதும் சரியில்லை, #makapa #priyanka உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை,நீங்கள் ஒருவரையொருவர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம் என சென்ற வாரம் தான் ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார் .
அதற்குள் இன்னொரு கண்டனம் . விஜய் டிவியில் வரும் கேபிஒய் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் பாலாஜி திருமதி கிரேஸ் பற்றி கமெண்ட் அடித்ததாக என் நண்பர் என்னிடம் தெரிவித்தார். அதாவது வழக்கமா எல்லா நிகழ்ச்சியும் வினாயகரை பற்றி பாடி துவங்குவாங்க இன்னைக்கு வித்யாசமா வினாயகரே பாடி துவங்கி வெக்கிறாங்க என்று பாலாஜி நிஜமாகவே சொன்னாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீப்ரியாவின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் அவர் கேட்பது நியாயமான கேள்வி, அவர் கோபம் நியாயம், இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பதில் அளிக்க வேண்டும். விஜய் டிவியிடம் இருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறோம், நாங்க வெயிட்டிங் என்று தெரிவித்துள்ளனர்.