செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஐஸ்வர்யா ராய் , விக்ரம் மற்றும் ஜெயராம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதில் நடிப்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்துக்காக 12 பாடல்களை எழுதவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.