பெங்களூரு:

ந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்டுள்ள சிறு தடங்கல், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும்  ககன்யான் திட்டத்துக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது, இரு திட்டங்களும் வெவ்வேறானவை  என்று இஸ்ரோ நிறுவன பூமி கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனரு மான பி.ஜி.திவாகர் தெரிவித்து உள்ளார்.

நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 திட்டத்தில் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், சந்திரயான் திட்டத்தில் 5 சதவிகிதம் அளவுக்கு  தோல்வி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பாதிக்கப்படுமோ என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கூறிய,  இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் துறை செயலாளரும், பெங்களூரு கூறும் போது, சந்திரயான்-2 இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களில் நிச்சயமாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

முக்கியமாக கனவுத்திட்டமான 2022-ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் போன்றவை எந்த பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். ஒவ்வொரு திட்டமும் வெவ்வேறானவை என்றார்.

ககன்யான் ( விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் )

.அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. அதே போன்று இந்தியாவும் 2022ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் என பிரதமர் மோடி 2018 சுதந்திரதின உரையில் அறிவித்தார். இத்திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டுள்ளது.

ககன்யான், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை மிகவும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு கொண்டு செல்வதுடன், இளம் தலைமுறையினருக்கு உந்துசக்தியாகவும் அமையும் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் இயக்குனராக  திருமதி. லலிதாம்பிகை நியமிக்கப்பட்டு உள்ளது. திட்டமதிப்பு உத்தேசமாக 10ஆயிரம் கோடி.  ககன்யான் விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் விண்கலத்துடன் 3 விண்வெளி வீரர்களுக்கான பகுதியும் மற்றொரு ஆய்வுப் பகுதியும் இணைக்கப்படும். இந்த மூன்றும் அதிநவீன ஜிஎஸ்எல்வி எம்கே-3 ராக்கெட்டில் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டவுடன் பூமியிலிருந்து 300-400 கி.மீ தொலைவில் உள்ள பூமியின் குறைந்த தூர சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடையும். இந்திய விண்வெளி வீரர்கள் 5 முதல் 7 நாட்கள் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்வார்கள்.

வீரர்கள் பூமிக்கு திரும்பும்போது, விண்கலம் திசை திரும்பி பயணிக்கும் இந்நிலையில் 120 கி.மீ. தொலைவில் வீர்ர்கள் இருக்கும் பகுதி விண்கலத்தில் இருந்து பிரியும். இப்பகுதி பாராசூட் உதவியுடன் அரபிக் கடலில் குஜராத் கடற்கரை அருகில் இறங்கும்.

இறங்கும்போது ஏதேனும் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் வங்கக் கடலில் இறங்கவும் ஏற்பாடு செய்யப்படும். கடலில் இறங்கிய 20 நிமிடங்களில் வீரர்கள் மீட்கப்படுவார்கள்.

விண்வெளி வீரர்கள் தங்கியிருக்கும் பகுதி 3.5 மீட்டர் விட்டம் கொண்ட சிறு அறையாக இருக்கும். இதன் எடை 7 டன்களாக இருக்கும்.

2022-ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முன்பு இரண்டு முறை ஆளில்லா விண்கலம் மூலம் சோதனை நடத்தப்படும். இதில் 30 மாதங்களுக்குள் முதல் சோதனை விண்கலமும் 36 மாதங்களுக்குள் இரண்டாவது சோதனை விண்கலமும் ஏவப்படும். இறுதியாக 40 மாதங்களுக்குள் வீரர்களை கொண்ட முதல் விண்கலம் ஏவப்படும்.

இந்த ககன்யான் திட்டத்தின் நோக்கம் மனிதனை விண்வெளிக்கு செலுத்துவது மட்டுமல்ல. விண்வெளிக்கு செல்லும் மூன்று மனிதர்களும் நுண் ஈர்ப்புவிசை சோதனையில் ( Micro Gravity Experiment ) ஈடுபடுவர்.

விண்வெளிக்கு செல்லும் மனிதர்களுக்காகவே தனியாக வடிவமைக்கப்பட்ட ஆளுற்ற விண்கலம் ( Crew Module ) 3.7 மீ * 7 மீ அளவு உடையதாய் இருக்கும் எனவும் இந்த ககன்யான் திட்டத்திற்கு தேவைப்படும் மூன்று மனிதர்களையும் இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படை தேர்வு செய்யும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.