சென்னை:
தமிழகத்தில் முகரம் பண்டிகைக்காக செப்டம்பர் 11ந்தேதி விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று முகரம் பண்டிகை. இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று மொகரம் பண்டிகை விடுமுறை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழ்நாடு அரசு தலைமை காஜியாரின் அறிவிப்பின் படி ஆக., 31 (சனிக்கிழமை) அன்று மாலை ஹிஜ்ரி 1441 முகரம் பிறை தென்படாததால் இன்று (செப். 2) திங்கள்கிழமை முதல் முகரம் பிறை 1 எனவும் வருகிற செப்.11 (புதன்கிழமை) முகரம் பண்டிகை கொண்டாடப்படும், என கீழக்கரை டவுன் காஜியார் காதர்பக்ஸ் உசேன் சித்திகீ தெரிவித்தார். அது தொடர்பாக தமிழக அரசுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, முகரம் பண்டிகையான செப்டம்பர் 11-ம் தேதி அரசு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.