தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மீசை தவசி.
சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு அப்பாவாக நடித்துள்ளார். அந்தப் படத்தில், கருப்பன்… குசும்புக்காரன்…என்று வரும் டயலாக்கை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
இயக்குனர் ராஜ்கபூரின் , ஊர் மரியாதை சீரியல் படப்பிடிப்பு தேனி அருகிலுள்ள கோம்பை என்ற பகுதியில் உள்ள ஒரு கோயிலில் நடந்து வருகிறது. இதற்கான படப்பிடிப்பில், புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் சிவா மற்றும் துணை நடிகர் மீசை தவசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் ஒரு காரிலும், சிவா, தவசி இருவரும் ஒரு காரிலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோம்பை அருலுள்ள உத்தமபாளையம் நோக்கி தவசி, சிவா சென்ற கார் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவரும் பலத்த காயத்துடன் அருகிலுள்ள உத்தமபாளையம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி ஸ்டில்ஸ் சிவா உயிரிழந்துள்ளார். தவசி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.