
கலைஞர் கருணாநிதியின் மகள் செல்வி- முரசொலி நாளிதழின் ஆசிரியர் செல்வத்தின் மகள் ஓவியாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை ஹோட்டல் லீலா பேலஸில் நடைபெற்றது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் விஜய்க்கும் அழைப்புவிடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது மனைவி சங்கீதாவுடன் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மு.க.ஸ்டாலின், துரை முருகன் ஆகியோர் அவரை வரவேற்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சந்திப்பு, திமுக மற்றும் விஜய் தரப்பினரிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
[youtube-feed feed=1]