
யோகிபாபு அடுத்து ஹீரோவாக நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த படத்துக்கு ‘ட்ரிப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டெனிஸ் மஞ்சுநாத் என்பவர் இயக்கி வருகிறார். யோகிபாபு உடன் கருணாகரன் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படத்தை சாய்பிலிம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்திற்கு சித்துகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். உதயசங்கர் ஒளிப்பதிவில் தீபக் துவாரகநாத் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது .
இந்தப் படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படம் என்பதால் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel