
பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் இயக்குனர் சேரன்.
பிக் பாஸ் வீட்டிற்கு தன்னை அனுப்பி வைத்தது விஜய் சேதுபதி தான் என ஒரு எபிசோடில் சேரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்றைய எபிசோடின் போது கமல் முன்னிலையில் பிக்பாஸ் அரங்கத்தில் இருந்த ரசிகர் ஒருவர் “நீங்கள் வெளியில் வந்த பிறகு சினிமாவில் உங்கள் கம்பேக் எப்படி இருக்கும்?” என சேரனிடம் கேட்க , அதற்கு அவர் “ஜனவரியில் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் துவங்குகிறது” என பதிலளித்தார். இந்த பதில் மூலம் விஜய் சேதுபதியுடன் அவர் இணையும் படம் ஜனவரியில் தொடங்கும் என தெரியவந்துள்ளது.
‘திருமணம் ‘படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் சேதுபதியை வைத்து அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சேரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]