
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ஜெயம் ரவியின் ‘ஜன கன மன’ படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
அகமது இயக்கி வரும் இந்த படத்தில் ஈரான் நாட்டின் நடிகை ல்னாஸ் நோரோஸி மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு ஜோடியாக நடித்த டயானா எரப்பா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஜெயம் ரவிக்கு நாயகியாக டாப்சி நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel