Iடில்லி

னப்பகுதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 27 மாநிலங்களுக்கு ரூ.47000 கோடி நிதி உதவி அளித்துள்ளது.

நாடெங்கும் வனப்பகுதிகளில் பல திட்டங்களை அமைக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.    அதன் அடிப்படையில் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல பணிகள் நிகழ்ந்துள்ளன.   இவற்றுக்கு ஈடாக ரூ.55000 கோடி அரசு வசூல் செய்துள்ளது.

இந்த நிதியை வனத்துறை ஊழியர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் மத்திய அரசு இவற்றைச் சரியான முறையில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வனப்பகுதி மேம்பாடு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புக்குப் பயன் படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் 27 மாநிலங்களுக்கு ரூ.47,436 கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது.

இந்த நிதியைப் பெறும் மாநிலங்கள் ஒரிசா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தராகாண்ட், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான்,.  ஆந்திரா, இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, அரியானா, பஞ்சாப், அசாம், பீகார், சிக்கிம், மணிப்பூர், கோவா, மேற்கு வங்கம், மிஸோரம், திரிபுரா, மேகாலயா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகும்.

இதில் அதிகபட்சமாக ஒரிசாவுக்கு ரூ.5933.98 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ.5791.70 கோடி மற்றும் மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.5196.69 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது.  இந்த நிதியை வழங்கிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த நிதியின் மூலம் வனவிலங்கு மேலாண்மை, வனவிலங்குகள் பாதுகாப்பு, உள்ளிட்ட பணிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.