சென்னை:
மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கொடுத்த மனைவி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை கிடைக்கும்.
கடந்த 2018ம் ஆண்டு, முன்ஜாமின் கோரி வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தைத் தாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தன்னை விட்டு பிரிந்த மனைவி காவல்துறையில் போக்சோ சட்டத்தின்படி புகார் அளித்துள்ள தாகவும், அதன் காரணமாக தான் செய்யப்படலாம் என அஞ்சி முன்ஜாமின் கோரி இருந்தார்.
வெங்கடேஷ்மீது அவரது மனைவி காவல்துறையில் அளித்த புகாரில், தனது கணவர், 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் காரணமாக அவள் கர்ப்பம் தரித்ததாகவும், பின்னர் ஆயுர்வேத மருந்துகள் கொடுத்து, அவரது கர்ப்பம் தடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார்.
இந்த வுழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தியதில், பொய் புகார் என்பது நிரூபணமானது.
இதைத்தொடர்ந்து, அந்த நபருக்கு முன் ஜாமீன் வழங்கிய நிலையில், ஒரு ஆணை அச்சுறுத்தும் நோக்கில் மனைவி அளித்த தவறான புகார் என்றும், தனது சொந்த மகளுடன் ஒரு ‘சட்டவிரோத உறவு’ வைத்திருப்பதைப் போல அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தியது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட நீதிபதி, “இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்று தெரிவித்தார்.
ஒரு பெண், தன் கணவருக்கு எதிராக பெற்ற மகளையே பாலியல் கொடுமை செய்தது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அளவிற்கா செல்ல முடிகிறது, இதை நம்ப முடியவில்லை என்று கூறியதுடன், போக்ஸோ சட்டத்தின் கீழ் கணவர் ஒரு குற்றத்தைச் செய்ததைப் போல தவறான புகார் அளிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் குடும்ப நீதிமன்ற வழக்குகளில் மலிவான தந்திரோபாயங்கள் பின்பற்றப்படுகின்றன என்றும் கூறினார்.
கணவனை திசை திருப்பவும் அவரை வீழ்த்தவும் கோர்ட்டில் இதுபோன்ற மலியான தந்திரங்கள் பின்படுகின்றன என்றவர், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் என்பதை நம்ப தயாராக இல்லை என்று கூறியவர், இந்த வழக்கு நீதிமன்றத்தின் கண்களை திறந்து உள்ளது என்றும், ஒரு பெண்ணின் சுயநல நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காகவே இதுபோன்ற வழக்குகளில் போக்ஸோ சட்டத்தை எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தலாம் என்பதை நீதி மன்றம் அறிந்து கொண்டது, என்றும் நீதிபதி கூறினார்.
மேலும், போக்சோ சட்டத்தின் பிரிவு 22 ன் கீழ் மனைவிக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கை களைத் தொடங்க காவல்துறைக்கு பரிந்துரைத்த நீதிபதி,
“இந்த வழக்கு போக்ஸோ சட்டத்தின் விதிகளை தவறாக பயன்படுத்த முயற்சிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், போக்சோ சட்டத்தில் கணவர் மீது பொய்ப்புகார் கொடுத்த பெண் ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படும்.