அமெரிக்கா-சீனா வர்த்தகப்போரில் இருதரப்பிலும் மாறி மாறி இழப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் சில கொள்கைகளை மாற்றிக்கொண்டால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் விவசாயப்பொருட்களை இரட்டிப்பாக்கிக்கொள்வதாக சீனா தெரிவித்தும் அமெரிக்கா அதன் கொள்கையில் இருந்து மாறவில்லை.
இந்நிலையில் 2 மில்லியன் டன் சோயாவை பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்தவாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 முதல் 30 கார்கோக்களில் சோயா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதம் வரை அங்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
சீனாவின் மீது வர்த்தகபோரை முன்னெடுத்துள்ள அமெரிக்கா நமது இந்தியாவின் மீதும் தொடர்ந்து குறைகளை கூறிக்கொண்டுவருகிறார் என்பதும் கவனத்துக்குரியது
-செல்வமுரளி