ஸ்ரீநகர்

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபாவின் மகள் இல்திஜா முஃப்தி தாம் வீட்டுச் சிறையில்   வைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

                          இல்திஜா                                                        மெகபூபா

காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் முன்னாள் முதல்வரும் மக்கள்  ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி கடந்த 5 ஆம் தேதி முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.     அத்துடன் மெகபூபாவின் மகள் இல்திஜா முஃப்தியும் அவர் குடும்பத்தினரும் குப்கர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  இது நாடெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இல்திஜாவை சந்திக்க தி ஒயர் ஊடகத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் கடந்த 7 ஆம் தேதி அன்று அவர் இல்லைத்துக்கு சென்றுள்ளார்.   ஆனால் அங்கு மஃப்டியில் இருந்த காவலர்கள் மேலிட  உத்தரவின் காரணமாக அவரை யாரும் சந்திக்க முடியாது என தடுத்துள்ளனர்.   இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இல்திஜா ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

தி ஒயர் ஊடகம் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில்,

அன்புள்ள ஐயா,

நான் எனது கைது குறித்து அறிய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தத்டல் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.    நான் எனது அடிப்படை உரிமைகள் குறித்து  கேள்விகள் எழுப்புவதற்காகக் குற்றம் சாட்டப்பட மாட்டேன் எனவும் தண்டிக்க மாட்டேன் எனவும் நம்பி வேண்டிக் கொள்கிறேன்.

காஷ்மீரில் இருண்ட மேகங்கள் சூழ்ந்துள்ளன.  இது குறித்து பேசும் அனைவரின் பாதுகாப்பை எண்ணி நான் அஞ்சுகிறேன்.  கடந்த 5 ஆம் தேடி அன்று விதி எண் 370 நீக்கப்பட்டதிலிருந்து காஷ்மீரிகள் ஆகிய நாங்கள் விரக்தியில் காலம் தள்ளுகிறோம்.    அன்று முன்னாள் முதல்வரான எனது  தாய் மெகபூபா முஃப்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகளைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 நாட்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   காஷ்மீர்  முழுவதும் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பயத்தின் பிடியில் சிக்கி உள்ளனர்.   நாட்டின் அனைத்து பகுதியினரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், காஷ்மீர் மக்கள் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு விலங்குகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர்.

நானும் எனது வீட்டுக்குள் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். எங்களைச் சந்திக்க வருபவர்கள் பற்றிய தகவல்கள் எங்களுக்கு அளிக்கப்படுவதில்லை.  அவர்களைச் சந்திக்க எங்களையும் அனுமதிப்பதில்லை.  நான் எந்த ஒரு கட்சியையும் சேராதவள் மற்றும் சட்டத்தை எப்போதும் மதிக்கும் குடிமகள்.   நான் ஒரு சில ஊடகங்களில் அளித்துள்ள பேட்டி காரணமாக என்னைக் கைது செய்துள்ளதாக எனது காவலர்கள் தெரிவித்தனர்.

நான் விதி எண் 370 குறித்த எனது கருத்துக்களை அந்த பேட்டிகளில் சொன்னதால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஆனால் எனது காஷ்மீர் மக்களின் எண்ணத்தையும் துயரத்தையும் வெளியில் சொல்வது எப்படி தவறாகும் என்பது எனக்குப் புரியவில்லை.   எங்கள் துயரத்தை வெளியில் சொல்வது எவ்விதத்தில் குற்றம் ஆகும்?   அதற்காக எங்களைக் கைது செய்ய முடியுமா?

தயவு செய்து நான் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளேன் என்பதையும் எனக்கு எத்தனை நாட்கள் வீட்டுக் காவல் தண்டனை என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது.   அல்லது நான் சட்ட உதவியை நாட வேண்டுமா?  என்னை இவ்வாறு துன்புறுத்தலாமா?  எனது வயதான பாட்டிக்கு அவர் மகனைபார்கக் வேண்டும்.  அந்த  பாட்டியும் அரசியல் விரோதியா?

உலகில் எந்த குடியரசு நாட்டிலாவது ஒருவர் தனது பேச்சுரிமையைப் பயன்படுத்துவது குற்றம் என சொல்லப்பட்டுள்ளதா?   சத்யமேவ ஜெயதே அதாவது வாய்மையே வெல்லும் என்பது நமது நாட்டின் முழக்கமாகும்.  ஆனால் நமது நாட்டில் வாய்மையைப் பேசுவோர் போர்க் குற்றவாளிகளைப் போல்  நடத்தப்படுகின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த  கடிதத்தை உங்களுக்குத் தபால் மூலம் அனுப்பாததற்கு மன்னிப்பு கோருகிறேன்.

உண்மை என்றும் வெல்லும்

வாழ்த்துக்கள்

இல்திஜா முஃப்தி

 

என அவர் தெரிவித்துள்ளார்.