டில்லி:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரகள் தேர்தல் டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
2வது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ள பாஜக, மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் நோக்கில், கட்சியின் மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.
அதன்படி மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் இன்று மாலை வெளியிட்டார்.