மெக்கா: இந்தாண்டு உலகெங்கிலுமிருந்தும் 20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம்கள், ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மெக்கா மற்றும் மெதினா நகரங்களுக்கு வருகை தந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களின் சொத்து, சுகபோகம் மற்றும் ஆசாபாசங்களை துறந்து அனைத்து முஸ்லீம்களும் சமத்துவத்துடன் கூடுமிடங்களே மெக்கா மற்றும் மெதினா ஆகிய ஸ்தலங்கள் என்று கூறப்படுகிறது.

இந்த யாத்திரையின்போது, ஆண்களைப் பொறுத்தவரை எளிமையான பருத்தி வெள்ளை உடையும், பெண்களைப் பொறுத்தவரை சம்பிரதாயமான உடைகளையும் அணிந்திருப்பர்.

ஏமனில் நடந்துவரும் உள்நாட்டு யுத்தம், சவூதி மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் நிலவும் பகைமை, வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை, சிரியாவில் இன்னும் நீடிக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு இடையே, இந்தாண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.