டில்லி

ந்த வருடத்துக்கான ஜிஎஸ்டி கணக்கை 80% மேற்பட்டோர்  அளிக்காததால் கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருடாந்திர ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்ய இந்த மாதம் 3 ஆம் தேதி  இறுதி எனக் கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கணக்கெடுப்புக்கு மறைமுக வரி அமைச்சகம் பல விதிகளை அறிவித்துள்ளது. உதாரணமாக ஒரு நிறுவனம் நான்கு மாநிலத்தில் தொழில் புரியும் போது அனைத்து மாநிலங்களுக்குச் சேர்ந்து ஒரே பாலன்ஸ் ஷீட் அமைக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித் தனி பதிவு எண் என்பதால் கணக்கு தனித்தனியாக வழங்க வேண்டிய நிலை உள்ளது.

அது மட்டுமின்றி ரூ. 2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கும் போது டனிக்கை அறிக்கை அவசியமாகிறது. தணிக்கையாளர்கள் தற்போது ஆகஸ்ட் 31க்குள் அளிக்க வேண்டிய வருமான வரிக்கணக்கில் மும்முரமாக உள்ளனர். இதனால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்துக்குள் தணிக்கையை முடிக்கவோ அல்லது அதைக் கொண்டு ஜிஎஸ்டி கணக்கு அளிக்கவோ முடியாத நிலை உள்ளது.

இதனால் மொத்தமுள்ள 90 லட்சம் பேரில் 19.3 லட்சம் ஜிஎஸ்டி கணக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. அதாவது 80% பேர் கணக்கு அளிக்காமல் உள்ளனர். எனவே இந்த கடைசி தேதியை ஆகஸ்ட் 31 வரை அரசு நீட்டித்துள்ளது. இந்த செய்தியை மத்திய மறைமுக வரிகள் ஆணையத்தின் தலைவர் பிரணாப் தாஸ் நாடெங்கும் உள்ள அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் உறுதி செய்துள்ளார்.