பிரபல செய்தித் தொலைக்காட்சி நிறுவனமனா என்.டி.டிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல செய்தித் தொலைக்காட்சியான என்.டி.டிவியின் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா உள்ளனர். இருவர் மீதும் வங்கி மோசடி தொடர்பான வழக்குகள் நிழுவையில் இருந்த நிலையில், மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர்களுக்கு, பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதோடு, அதிகாரிகளால் இருவரும் தடுத்தும் நிறுத்தப்பட்டனர்.

பிரணாய் ராய் மற்றும் ராதிகா ஆகியோர் தப்பிச்செல்ல முயல்வதாக கூறி, அவர்கள் தடுக்கப்பட்டதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய புலனாய்வு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள என்.டி.டிவி, “ஊடகங்களை அச்சுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில், இன்றைக்கு வெளிநாடு செல்ல இருந்த எங்களின் நிறுவனங்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ஆகியோர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடன் விவகாரம் தொடர்பாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தொகையை முழு வட்டியோடு, காலதாமதம் ஏதும் இன்றி நிறுவனர் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு மேல்முறையீட்டு வழக்கும் டில்லி உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது. இருவருமே வெளிநாட்டிற்கு அவ்வப்போது சென்றுவருவதை வழக்கமாக கொண்டுள்ளவர்கள் தான். அத்தோடு வழக்கின் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.

ஆனால் நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்காமல், அதிகாரிகள் இவ்வாறு நடந்துக்கொண்ட விதமும், மீடியா நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் இல்லங்களில் நடத்தப்படும் ரெய்டுகள் போன்றவை மிரட்டும் தோணியிலேயே இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]