நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசிக்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படவிருப்பதாக இன்று காலை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 1200 கிலோ ரேஷன் அரசி கொண்ட மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரயிலில் கேட்பாரற்று கிடந்த இந்த 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினர், இது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.