பெங்களூரு
பெங்களூரு நகரில் உள்ள மக்கட் தொகையில் பாதிக்கும் மேல் வெளியூர்க்காரர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் பல தனியார் நிறுவனங்களின் அலுவலகம் அமைந்துள்ளன. மேலும் இது ஒரு சுற்றுலா நகரமாகவும் விளங்குவதால் ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் கடைகளும் உள்ளன. தற்போது தகவல் தொழில்நுட்பத்தின் தலைநகர் பெங்களூரு எனக் கூறும் அளவுக்கு இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன.
இவ்வளவு வசதிகள் உள்ளதால் பல ஊர் மக்களும் பெங்களூருவில் பெருமளவில் குடி புகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதைய பெங்களூரு நகரின் மக்கட் தொகையான 96.2 லட்சம் மக்களில் 44.3 லட்சம் பேர் அதாவது 50.4% மக்கள் வெளியூரில் இருந்து இங்கு குடி பெயர்ந்தவர்கள் ஆகும். இதில் பெரும்பாலானோர் கர்நாடகா மாநிலத்தைச் சேராதவர்கள் ஆவார்கள்.
இவ்வாறு குடியேறியவர்களில் 30% பேர் தமிழகத்தில் இருந்து வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். அதை அடுத்து ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து அதிகம் பேர் வந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரள மக்கள் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து 5.2 லட்சம் பேர், ஒருன்க்கிணந்த ஆந்திராவில் இருந்து 3.6 லட்சம் பேர் மற்றும் கேரளாவில் இருந்து 1.7 லட்சம் பேர் வந்துள்ளனர்.
இவ்வாறு வெளி இடங்களில் இருந்து வந்துள்ள 44.3 லசம் பேரில் 3.6 லட்சம் பேர் தலித்துகள் ஆவார்கள். இவர்களில் பலர் வேலை நிமித்தமாகவும் சிலர் திருணத்தாலும் இங்கு இடம் பெயர்ந்துள்ளனர். திருமணம் காரணமாக இடப் பெயர்ந்தவர்களில் 92% பெண்கள் ஆவார்கள். இதைத் தவிர பழங்குடியினர் 88,405 பேர் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
வெளி மாநிலங்களில் மேலே குறிப்பிட்ட தென் மாநிலங்களுக்கு அடுத்த படியாக ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஏராளமாக பெங்களூருவில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வர்த்தகர்கள் ஆவார்கள். மிகக் குறைந்த அளவு ராஜஸ்தானியர்களே பணியில் உள்ளனர்.