வேலூர்:
வேலூர் மக்களவை தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 11 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வந்துள்ளது. அங்கு மந்தமான நிலையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தற்போது 11 மணி அளவில் 14.61 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. காலை 10 மணி அளவில் மொத்தம் 7.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வேலூர் – 14.36 சதவிகிதம்
அணைக்கட்டு- 12.56 சதவிகிதம்
கே.வி.குப்பம் – 16.90 சதவிகிதம்
குடியாத்தம் – 15.19 சதவிகிதம்
ஆம்பூர் – 16.32 சதவிகிதம்
வாணியம்பாடி – 12.40 சதவிகிதம்
தற்போதை சூழ்நிலையில் அங்கு மந்தமாகவே வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 4 மணி நேரம் ஆகியும் 14 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. வரும் 9ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.