நாம் வாட்ஸ்அப் செயலியின் மூலம் நமக்கு வரும் செய்திகள் எத்தனை முறை பகிரப்பட்டது என்ற வசதியினை நாம்மால் பார்க்கவியலும். இதன் மூலம் 5 முறைக்கு மேல் செய்தி பகிரப் பட்டால் அதன் செய்தியின் மேல் அதிகமாக பகிரப்பட்ட செய்தி ( ‘frequently forwarded’) என்ற செய்தி காட்டப்படும். இதனால் குறிப்பிட்டசெய்தியின் பிரபலத் தன்மையை அறிந்துகொள்ளலாம்
இதற்கு முன்னர் சோதனையில் இருந்த இந்தித்திட்டம் இப்போது அனைத்து இந்திய பயனாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் மேம்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ்அப் பணிபரிவர்த்தனை சேவையும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 40 கோடி பயனாளர்கள் இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்கது
-செல்வமுரளி